Monday 26 September 2016

தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா? 01

தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா? 01
தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா?

தேவபந்த் ஜமாஅத்தின் இமாமுல் அவ்வல் மௌலவி இஸ்மாயில் சாஹிப், தக்வியதுல் ஈமான் எனும் நூலின் 8,10,21,26,27,25,24,58ம் பக்கங்களிலும் மௌலவி ரஷீத் அஹ்மத் கொங்கோஹி பதாவா ரஷீதியாவின் 1:20, 2:141, 3:17,42, '"125,ம் பக்கங்களிலும் மௌலவி அஷ்ரப் அலி தானவி பெஹ்ஷ்தி சயூர் பாகம் ஒன்று பக்கம் முப்பத்திஏழு, பதாவா இம்தாதிய்யா 4:56லும் அவ்வாறே மௌலவி அப்துச்சகூர், காரி தய்யிப், மௌலவி மன்லூர் நுமானி, மௌலவி கலீல் அஹ்மத் ஆகியோரும் பிவருமாறு கூறியுள்ளார்கள்.
‘எவர் அல்லாஹ் அல்லாத இன்னுமொருவர் மறைவானவற்றை அறிவார் எனவும் நபிமார் வலிமார்கள் வருகை இடம்பெறுகிறது. அவர்களை அழைத்து உதவி தேடலாம் என்றும் கூறுவாரோ அவர் சந்தேகம் இல்லாமல் காபிராகும். அவ்வாறானதொரு நபர் இமாமத் செய்யக்கூடாது. அவருடன் நெருக்கம், அன்புடன் நடந்து கொள்வது ஹராம் ஆகும்’. (பதாவா ரஷீதிய்யா.)
இதனைப் படிக்கின்ற எந்தப் பாமரனும் நமது அருமை நாயகம் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் உட்பட எந்தவொரு நபிக்கும் மறைவான அறிவு அறவேயில்லை. அவர்களுக்கு எவ்விதமான ஆற்றலும் கிடையாதுன்னு நம்பிக்கை கொள்வதுடன் மேற்க்கூறிய நம்பிக்கையில் உள்ள ஒருவர் பிழையான நம்பிக்கையில் இருக்கிறார் எனவும் நம்புவார்.
இதுவே அல்லாஹ்வுக்கு உருவமும் இடமும் இருக்கின்றதென்று பிரச்சாரம் செய்யும் வஹ்ஹாபிகளின் அகீதாவுமாக இருக்கிறது. இதனால்தான் தப்லீக் இயக்கத்தினர்களான நீங்களெல்லாம் வஹ்ஹாபிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காமல் இருக்கின்றீர்கள் என்பது நமக்குத் தெரியும்..
அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் இருப்பதாக நம்பும் ஒருவரைக் காபிர் என்று தீர்ப்பளித்துள்ள மேற்க்கூறிய உலமாக்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் அவர்கள் மரணமான பின்னர் இருப்பதாக யாராவது சொன்னால்? அவரும் காபிர் என்றுதானே அர்த்தம்.
தேவபந்த் தாருல் உலூம் மதரசாவின் தலைவராக மௌலவி ரபீஉத்தீன் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த காலப்பகுதியில் கல்லூரியின் ஆசிரியர்கள் மத்தியில் சிறு தகறாரு உருவானது. கல்லூரியின் அதிபர் மௌலவி மஹ்மூத் ஹசனும் இதில் இணைந்து கொண்டதால் தகறாரு நீளத் தொடங்கியது.
இப்படியானதொரு இக்கட்டான சூழ்நிலையில் ஒருநாள் ஸுபுஹ் தொழுகையின் பின்னர் மௌலவி ரபீஉத்தீன் அவர்கள் கல்லூரியில் இருக்கையில் மௌலவி மஹ்மூத் ஹசன் அவர்களை அவரது அறைக்குள் வருமாறு அழைத்தார். அதுவொரு குளிர் காலமாகவேறு இருந்தது.
மௌலவி மஹ்மூத் அவர்கள் உள்ளே வந்ததும், எனது போர்வையைப் பாருங்கள் என்றார் அதிபர். அது முழுமையாக நனைந்து இருந்தது. அதிபர் அவர்களும்கூட வியர்வையால் நனைந்து இருப்பதைக்கண்டு அதிசயப்பட்டார். இது பற்றி அதிபர் பின்வருமாறு கூறினார்.
இப்பொழுதுதான் மௌலானா நாநூதவி ரஹ்மாதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் வந்து இங்கு வந்து சென்றார்கள். அவர்களைக் கண்டதும் வியர்த்துக் கொட்டிவிட்டது. தர்கத்தில் செல்லாது இருக்குமாறு உங்களுக்கு கூறுமாறு சொல்லிவிட்டுச் சென்றார்கள். அதை சொல்லவே உங்களை நான் அழைத்தேன் என்றார். உடனே அதிபரின் கரம் பற்றி தௌபா சொல்லி இதன் பிறகு நான் தகராரில் இறங்கமாட்டேன் என்றும் கூறி சென்றார். நூல்: அர்வாஹே தலாசா பக்கம் 242.
தப்லீக் பிரியர்களே!
மரணமான பின்னரும் மௌலானா நாநூதவி அவர்களுக்கு கல்லூரி பற்றிய கவலை இருக்கிறது. கல்லூரியில் இடம் பெரும் நிகழ்வுகளை அவதானித்துக் கொண்டிருக்கிறார். யார்யார் என்னென்ன செய்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டிருப்பதற்கும் அப்பால் கப்ரில் இருந்து புறப்பட்டு வெளியேறி அவரின் சொந்த தோற்றத்தில் சமூகம் தந்ததை தப்லீக் முன்னோர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன?





Enter