Saturday, 24 September 2016

குஜராத்து உச்ச நீதி மன்றம் திர்ப்பு

குஜராத் சரஸ்பூர் *மௌலவி காரீ  தய்யிப் ஹசைனலி பாட்டிவாலா* பகிரங்கமாக சொல்லியதாவது
*"நான் நபியுடைய ஸகோதரன்,*
*நாம் நபியுடைய சகோதரர்கள்"*

இதை தொடர்ந்து 2010ல் வழக்கு தொடரப்பட்டது.

ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியது சட்டப்படி குற்றம் என்றும், அதற்காக அந்த மௌலவி விசாரணையிலிருந்து தப்ப முடியாதென்றும் குஜராத்து உச்ச நீதி மன்றம் நீதி சொல்லியுள்ளது.

2009ல் பட்டிவாலா ஜுஹாபுராவின் பல்வேறு கூட்டங்களில் உரையாற்றும் பொழுது வலிமார்களை துவேசித்தும்,அவர்களின் ஜியாரத்தை உடைக்குமாறும் மக்களை தூண்டினார்.  பட்டிவாலாவின் மீது சுமத்தப்பட்ட மிக முக்கியமான குற்றச்சாட்டு கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களை தமது சகோதரர் என்று குறிப்பிட்டு உரையாற்றிது மட்டுமின்றி ,மக்களையும்  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களையும்  சகோதரர் என்றே அழைக்க வேண்டும் என்று தூண்டினார் .