Tuesday 6 December 2016

தேவ்பந்தீய வஹ்ஹாபிகள் , வஹ்ஹாபிய தவ்ஹித்வாதிகள்  மற்றும் இது போண்ற ஏனைய வழி தவறிய கூட்டத்தாரிடம் !!!

தேவ்பந்தீய வஹ்ஹாபிகள் , வஹ்ஹாபிய தவ்ஹித்வாதிகள்  மற்றும் இது போண்ற ஏனைய வழி தவறிய கூட்டத்தாரிடம் !!!

பரிவு காட்டுபவர்கள் ! மற்றும் அவர்களை உண்மையான முஸ்லீம்கள் என நமபக்கூடிய சரியான புரிதல் இல்லாதவர்களுக்கான பதிவு.!!!

பதிவு:

இண்றைய காலகட்டத்தில் சிலர் கூறுகின்றனர்  "நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் காபிரைக்கூட வெறுத்ததில்லை அவர்களிடமும் நல்ல அனுகு முறையுடன் நடந்துள்ளார்கள்.

இதனால் நாமும் காபிர்,வஹாபி,தப்லீக், தேவ்பந்தீ மற்றும் இதுபோண்ற கூட்டத்தாரிடமும் விரோதிக்காமல் நல்ல அனுகுமுறையுடன் நடந்து கொள்ளவேண்டும்" என்று.

*முதலில் இதற்கான சில ஹதீஸ்களை பதிவு செய்யலாம்.*

(1) ஒரு பெண்மனி தினமும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்களின் மேல் குப்பைகளை கொட்டிக்கொண்டிருந்தாள் இருப்பினும் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவளைத்திட்டவில்லை.

ஒருநாள் அவளின் உடல்நிலைசரியில்லாததை கேள்வியுற்றவர்கள் அவளைக்கான அவளின் வீட்டீற்குச் சென்றார்கள். இந்த நல்ல அனுகுமுறையின் காரணமாக அவள் இஸ்லாத்தை ஏற்றால்.

(2) யார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பார்கிறார்களோ அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கேள்வியுற்றப் பெண்மனி அவர்களை பார்பதைத்தவிர்பதற்காக ஊரைவிட்டே வேறொரு இடத்திற்கு சென்றுகொண்டிருந்தாள். வழியில் அவளைக்கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அவளின் உடைமைகளை எடுத்துக்கொண்டு அவள் செல்லும் இடத்திற்கு கொண்டு சேர்த்தார்கள். அதற்கு அவள் கூலிதர அதை மறுத்தார்கள். தங்களின் பெயரையாவது கூறுங்கள் என அவள் கூறியதற்கு "முஹம்மத்(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)" என உரைத்தார்கள் இந்த அனுகு முறையால் அவள் இஸ்லாத்தை ஏற்றார்.

(3) ஒரு காபிர் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தான். அவனுக்கு நல்ல முறையில் விருந்தோம்பல் செய்தார்கள். இரவு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் படுக்கையை அசுத்தப்படுத்திவிட்டு சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்து அவன் வந்து பார்க்கையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் தன் கரங்களினாலேயே அதை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

இந்த நல்ல அனுகு முறையின் காரணமாக  அவர் ஈமான்கொண்டார்.

*இப்பொழுது நாம் மறுபக்கத்தைப் பார்ப்போம்...*

ஹதீஸ்:

"பாவிகளைப்பற்றி குறைகூறுவதை விட்டு ஏன் தவிர்துக் கொள்கிறீர்கள்? அவர்களைப்பற்றி மக்கள் எவ்வாறு அறிந்துகொள்வார்கள் (கன்ஜுல்உம்மால்−பக்கம் எண்338)

ஹதீஸ்:

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் "உங்களை அவர்களிடமிருந்து விலக்கிக் கொள்ளுங்கள், மேலும் அவர்களிடமிருந்து விலகி தூரமாகிவிடுங்கள். அவர்கள் உங்களை வழிகேட்டில் ஆழ்த்திவிடக்கூடும்"
(முஸ்லீம்ஷரீப்; பாகம்10)

குர்ஆனின் வசனம்:

"உங்களில் யார் அவரிடம் நட்புக்கொண்டார்களோ, அவர்கள் அவர்களின்றவர்களாவார்கள்" (ஸூராமாயிதா−51)

ஹதீஸ்:

யார் காபிரை நேசிக்கிறார்களோ அவர்கள் அவரைச்சார்ந்தவர்களாவார்கள் (முஸ்னத்அஹமத்−7:209)

ஹதீஸ்:நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபுஜஹல், உத்பா பின் ராபியா, சொய்பா பின் ராபியா ஆகியவர்களின் பெயரைச்சொல்லி சபித்தார்கள்.

(புகாரிஷரீப், கிதாபுல்விர்த்)

ஹதீஸ்:

ஒரு நபர் மஜ்ஜீதுன் நபவியில் தொழுது கொண்டிருந்தான், இருப்பினும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சஹாபா பெருமக்களைப் பார்து அவனைக் கொன்றுவிடுமாறு உத்தரவிட்டார்கள்.
(கஸஸுல்குப்ரா−பக்கம்229)

ஹதீஸ்:

ஒரு பெண்மனி நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பழித்துக்கொண்டேயிருப்பதைக் கண்ட அவளின் கணவன் அவளை கொலைசெய்து விடுகிறான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த கொலைக்கு மண்ணிப்பு உன்டு எனக்கூறினார்கள்
(அபு தாவூத்−1−599)

ஹதீஸ்:

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் மஜ்ஜீதுன்நபவியில் 300பெயர்களை வாசித்து இவர்கள் "முனாபிக்குகள்"என்று கூறி மஜ்ஜீதிலிருந்து வெளியேற்றினார்கள்.

(முஸ்லீம்ஷரீப்− பாகம்1−கிதாபுல் பித்னா)

இப்பொழுது சிந்தியுங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாருக்கு இஸ்லாத்தை பற்றிய சரியான ஞாணம் இல்லையோ அந்த காபிர்களிடம் நல்ல அனுகுமுறையை மேற்கொண்டார்கள்.இதனால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

ஆனால், இஸ்லாத்தை அறிந்த பிறகு இஸ்லாத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவர்களை சபித்தார்கள்,

*தன்னுடைய மஜ்ஜீத்திலிருந்து வெளியேற்றினார்கள்,*அவர்களை முனாபிக்குகள் என கூறினார்கள், கொலைசெய்யவும் கூறினார்கள், சஹாபாபெருமக்கள் கொல்லவும் செய்தார்கள்.

இதனால் அஹ்லே சுன்னத் வஜமாஅத்தை சார்ந்தவர்கள்

வஹாபிய தவ்ஹித்வாதிகள், தேவ்பந்தீய வஹ்ஹாபிகள்

இது போண்ற மற்ற வழிதவறிய கூட்டத்தினரிடம் சென்று நல்ல முறையில் அணுகி புரிய வைக்கின்றார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் மறுத்து வேண்டுமென்றே நபிகள் நாயகம்ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்களைப் பழிப்போரை மக்கள் இனம்கண்டுகொள்ள அவர்களை பழிக்கவேண்டும், அவர்களின் தீயகொள்கைகளை மக்களிடம் வெளிச்சம்போட்டு காட்டவேண்டும்.

உங்கள் வீட்டில் திருடியவனை நீங்கள் திருடண் என்று கூறமாட்டீர்களா?
அனுக்கு தண்டனை வழங்கமாட்டீர்களா?

பிறகு ஏன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப்பழிப்பவர்கள் மீது மட்டும் நல்ல அனுகுமுறையை கையாளுமாறு கூறுகிறீர்கள்?

நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்பழிப்போரைக் கொண்ற சஹாபாபெருமக்களிடம் நல்ல அனுகுமுறை இல்லை எனக்கூறுவீர்களா?

அல்லது சஹாபாபெருமக்களின் அனுகு முறையைவிட உங்கள் அனுகுமுறை சிறந்தது எனக்கூறுகிறீர்களா? சிந்தியுங்கள்

*அஹ்லே ஸுன்னத் வ ஜமாஅத் (பரேல்வி )*